Tamil Cinema News
நான் நடிக்கணும்னு நினைச்சு கை நழுவி போன படங்கள்.. மனம் நொந்த கமல்ஹாசன்.!
நடிகர் கமல்ஹாசன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தார். தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன ஒரே நேரத்தில் எல்லா திரைப்படங்களையும் நடிக்க முடியாது என்பதால் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்து கொண்டிருந்தார் கமல்ஹாசன்.
ஆனால் கமல்ஹாசனே விரும்பியும் கூட அவருக்கு கிடைக்காமல் போன வாய்ப்புகள் சில உண்டு. அவற்றைப் பற்றி கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது வேறு மொழியில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது.
அந்த படத்தின் இயக்குனர் எனக்கு குரு மாதிரி, அவரிடம் நான் அந்த படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்குமாறு கேட்டேன். அவர் பதில் சொல்கிறேன் என்று கூறினார். சில நாட்களில் படம் குறித்த செய்தி வெளியானது. அதில் வேறு ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது.
உடனே நான் இயக்குனரிடம் சென்று ஏன் என்னை நடிக்க வைக்கவில்லை என்று கேட்டேன். அப்பொழுது அவர் உங்களுக்கு உயரம் குறைவாக இருக்கிறது என்று கூறினார் நானும் சரி என்று விட்டுவிட்டேன்.
பிறகு சுபாஷ் சந்திர போஸின் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோதுதான் அவருடைய ஆடைகளாக இருந்தன. அப்பொழுதுதான் அவர் என்னுடைய உயரம் தான் இருந்தார் என்பதே எனக்குத் தெரிந்தது.
அதேபோல பெரியாரின் கதையை படமாக்கும் பொழுது அதில் பெரியாராக நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் அளவிற்கு வயது ஆன பிறகு அதில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் அதற்குள் அதை தமிழில் படமாக்கி விட்டனர் என்று கூறி இருக்கிறார் கமல்ஹாசன்
