News
நெருக்கமா நடிக்கும்போது இந்த உணர்வு அதிகமாகுது.. ஓப்பனாக கூறிய நடிகை மிர்னள் தாக்கூர்!.
Mrunal Takur: சினிமாவில் ஒரு சில நடிகைகள் தாங்கள் அறிமுகமாக முதல் படத்திலிருந்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள் ஏனென்றால் அந்த படத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் ஆனதாக இருந்திருக்கும் மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகைகளும் தத்ரூபமாக நடித்திருப்பார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான்மிருணால் தாக்கூர். இவரின் இந்த பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. சீதா மகாலட்சுமி என்று கூறினால் அனைவரின் நினைவிருக்கும் உடனே வந்து விடுவார்.
தற்பொழுது இவர் படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது ஏற்படும் உணர்வை பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மிருணால் தாக்கூர்
மிருணால் தாக்கூர் ஹிந்தி சீரியல் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஆவார். சீரியல் தொடர் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து வெள்ளித்திரையில் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஹிந்தியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் “கும்கும் பாக்யா” என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்தார். மேலும் இந்த சீரியல் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு “இனிய இரு மலர்கள்” என தமிழில் வெளியானது. அப்பொழுது மிருணால் தாக்கூருக்கு தமிழிலும் பெரும் அளவில் ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளிவந்த “சீதா ராமம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இவர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சையமானார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல படங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.
மனம் திறந்து பேசிய மிருணால் தாக்கூர்
இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தொடர்பாக பேசி இருந்தார். அதில் மிருணால் தாக்கூர் தான் படங்களில் நெருக்கமான காட்சிகளில் அதாவது முத்தக் காட்சியில் நடிக்கும் பொழுது எனக்கு அசௌகரியமாக இருக்கும்.
மேலும் நான் இவ்வாறு நடிப்பதை என் பெற்றோர்கள் ஏற்றுக் ஏற்றுக் கொண்டதில்லை என கூறி இருக்கிறார். தற்பொழுது இவர் இவ்வாறு கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது.
