News
ஆரம்பத்துல இருந்த சாபாஸ்டியன் சைமன் பத்தி தெரியுமா? முருகனையே பிடிக்காது.. சீமான் குறித்து பேசிய நடிகை விஜயலெட்சுமி..!
தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட முக்கிய கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்றாகும். ஆனால் எப்பொழுதுமே நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும்.
திரு சீமான் அவர்களுக்கும் சினிமா நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். நடிகை விஜயலட்சுமி இது குறித்து நிறைய பேட்டிகளில் கூறி இருக்கிறார். எப்போதுமே திரு சீமான் ஒரு கிறிஸ்தவர் என்றும் ஆரம்பத்தில் அவர் கிறிஸ்தவராக இருந்து பிறகு இந்து மதத்திற்கு மாறினார் என்றும் பேச்சுக்கள் உண்டு.
இந்த நிலையில் இதுகுறித்து முத்துலெட்சுமி கூறிய விஷயங்கள் தற்சமயம் அதிர்ச்சியை ஊட்டுவதாக இருக்கின்றன. முத்துலட்சுமி ஒரு பேட்டியில் கூறும்பொழுது சீமானும் நானும் காதலித்து வந்த பொழுது ஆரம்பத்தில் இருந்து எங்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை.
சீமானின் கடந்த காலம்:
படப்பிடிப்புக்காக ஒரு முறை பழனிக்கு சென்றிருந்த பொழுது நான் முருகனை தரிசித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஏனெனில் பழனிக்கு சென்றால் கண்டிப்பாக முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக நான் தரிசிக்க சென்றேன்.
ஆனால் சீமான் என்னை அதற்கு விடவில்லை. நான் முருகனை வணங்க கூடாது என்று அவர் கூறிவிட்டார் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கேட்ட தொகுப்பாளர் சீமான் முருகனுக்கு ஆதரவான ஆள் தானே, எப்பொழுதும் மேடையில் முருகன் குறித்து தானே பேசுகிறார்.
அவர் ஏன் உங்களை முருகனை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கேட்டார் அதற்கு பதில் அளித்த முத்துலெட்சுமி அப்போதைய காலகட்டத்தில் சீமான் கிறிஸ்துவராக இருந்தார். அவர் அப்பொழுது நிறைய முறை போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருடைய பெயர் சாபாஸ்டியன் சைமன் என்று தான் எழுதப்பட்டிருக்கும்.
அதனால் அப்பொழுது அவர் முருகனை வணங்க கூடாது என்று கூறி வந்தார் என்று கூறியிருக்கிறார் முத்து லட்சுமி. இந்த நிலையில் தான் சீமான் இப்பொழுது முருகனுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்று இதுக்குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
