சண்டையை மறந்த மிஷ்கின் – விஷால்? – லோகேஷ்தான் காரணமாம்!

தமிழில் சித்திரம் பேசுதடியில் தொடங்கி பல ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். விஷால் நடித்து மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படம் 2017ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Social Media Bar

அதன் ஹிட்டை தொடர்ந்து மீண்டும் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கி பாதி முடிந்திருந்த நிலையில் இருவருக்குமிடையே சண்டை வெடித்தது. அதை தொடர்ந்து மிஷ்கின் அந்த படத்திலிருந்து வெளியேற மீத படப்பிடிப்பை விஷாலே இயக்கி முடித்ததாக தகவல்.

இதுகுறித்து இயக்குனர் மிஷ்கினும் பொது நிகழ்ச்சிகளில் விஷாலை தாக்கி பேசி வந்தார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தில் மிஷ்கினும், விஷாலும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பேருக்குமே அதில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

முன்னர் நடந்த சண்டையை மறந்து இருவரும் இந்த படத்தில் இணைந்தால் ட்ராப் ஆகி நிற்கும் துப்பறிவாளன் 2-ம் பாகம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.