தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் நாகேஷ் இருந்து வருகிறார். நாகேஷ் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மிகப் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர்.
அதனாலேயே தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் அவர் வாய்ப்புகளை பெற்றார். இருந்தாலும் கூட அவரது திருமணத்திற்கு உதவிய நாகிரெட்டி குறித்து சமீபத்தில் முன்பு ஒரு பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது நான் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் என்னுடைய நடிப்பு நாகிரெட்டிக்கு பிடித்து விட்டது. அதே படத்தை தெலுங்கில் எடுத்து அதிலும் அவர் என்னையே நடிக்க சொன்னார்.
இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே அவர்தான் தயாரிப்பாளர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு உங்களுக்கு சம்பளம் எவ்வளவு பேசப்பட்டது என்று கேட்டார். 250 ரூபாய் என்று கூறினேன். அப்படி என்றால் இரண்டு படத்திற்கும் சேர்த்து 500 ரூபாய் வருகிறது அல்லவா என்று கேட்டார்.

ஆமாம் என்றேன். பணம் உடனே வேண்டுமா என்று கேட்டார் ஆமாம் இன்னும் சில நாட்களில் திருமணம் இருக்கிறது என்று கூறினேன். யாருக்கு திருமணம் என்று கேட்டார். எனக்கு தான் திருமணம் என்று கூறினேன்.
உடனே அவர் ஆயிரம் ரூபாய்க்கு செக் எழுதி என்னிடம் கொடுத்தார் நானும் அதை வைத்து எனது மனைவியோடு நல்லபடியாக ஒரு ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணத்தை செய்தேன்.
திருப்தியாக சாப்பிட்டோம் பிறகு பிச்சைக்காரர்களுக்கு காசு போட்டோம் இப்பொழுது வரை நிம்மதியாக இருக்கிறோம் ஆனால் திருமண சமயத்தில் அந்த ஒரு மகிழ்ச்சி அதிகமாக கிடைத்ததற்கு நாகிரெட்டி கொடுத்த ஆயிரம் ரூபாய் தான் காரணம் என்று கூறுகிறார் நடிகர் நாகேஷ்.








