நானி கே.ஜி.எஃப் நாயகி கூட்டணியில் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான ஹிட் 3 ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் நடிக்க தெரிந்த சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கூட பிரபலமான நடிகராக நானி இருந்து வருகிறார். தமிழில் அவர் நடித்த நான் ஈ, சாம் சிங்கா ராய், நானிஸ் கேங்க் லீடர் ஆகிய படங்கள் தமிழில் கொஞ்சம் பிரபலமானவை.

சமீபத்தில் அவர் நடித்த தசரா திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் நானி தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் ஹிட் 3

ஹிட் திரைப்படமானது தெலுங்கில் ஏற்கனவே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதனாலேயே இரண்டு பாகங்கள் வரை வந்து அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் ஹிட் 3 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கே.ஜி.எஃப் புகழ் நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க  இரத்த களரியான காட்சிகளை கொண்டுள்ளது. மிக அரிதாகதான் நானி இந்த மாதிரியான ரத்தகளரியான திரைப்படங்களை தேர்ந்தெடுப்பார்.

ஒருவேளை கதைக்களம் நன்றாக இருந்தால் அவர் இந்த மாதிரியான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுண்டு. அந்த வகையில் இந்த படத்திற்கு டீசரிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வருகிற மே 1 அன்று திரைக்கு வர இருக்கிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.