Connect with us

சமந்தாவை வன்மம் தீர்க்கதான் அந்த நாளை தேர்ந்தெடுத்தது!.. நாக சைதன்யா நேற்று நிச்சயம் செய்ய இதுதான் காரணமாம்!.

samantha naga chaithanya

Latest News

சமந்தாவை வன்மம் தீர்க்கதான் அந்த நாளை தேர்ந்தெடுத்தது!.. நாக சைதன்யா நேற்று நிச்சயம் செய்ய இதுதான் காரணமாம்!.

தமிழ் சினிமாவில் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது ஹீரோக்களுக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளதோ அந்த அளவிற்கு சமந்தாவிற்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நுழைவதற்கு பல கஷ்டங்களை கடந்து வந்த சமந்தா தற்போது சினிமாவில் தனக்கான ஒரு மார்க்கெட்டை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் சமந்தா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வளர்ந்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் திருமணம் நடந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தார்கள். தற்போது நாக சைதன்யாவிற்கு பிரபல நடிகை ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அவர் நிச்சயதார்த்தம் செய்த நாளை பற்றியும் சமந்தாவை பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா

நடிகை சமந்தாவிற்கு ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படம் தான். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியாக நடித்து வந்த சமந்தா, அதற்காக எப்பொழுதும் தயங்கியதில்லை. இந்நிலையில் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். அதன் பிறகு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்தார்.

இருவரும் 8 ஆண்டுகள் காதலித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

samantha

இவர்கள் பிரிவுக்கு புஷ்பா படத்தில் அவர் கவர்ச்சியாக ஆடியது தான் காரணம் என பலரும் கூறிவந்தனர். ஆனால் சமந்தா ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு சினிமாவில் சற்று கவர்ச்சியாக தான் நடித்து வந்தார்.

இதன்பிறகு நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நாயகி சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலானது.

அதே நாள்

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்ற நாளில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா அவருடைய காதலை நாக சைதன்யாவிடம் தெரிவித்தார் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதே நாளில் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்திருப்பது சமந்தாவை வெறுப்பேற்றுவதற்காக செய்கிறார் என்றும், பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top