தயாரிப்பாளரால் பண்ணுன அந்த தப்பால் படம் காலி ஆயிடுச்சு..! விஜய்க்கு நடந்த சோகம்.. ரகசியத்தை வெளி கொண்டு வந்த பிரபலம்!..

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை பார்த்தவர் நடிகர் விஜய். அதனால்தான் அவரது திரைப்படம் தோல்வியடைகிறது என்றால் கூட அது நடிகர் விஜய்யை பெரிதாக பாதிக்காது.

ஏனெனில் அந்த மாதிரியான தோல்வி படங்களை எல்லாம் ஏற்கனவே தோல்வி கொடுத்த படங்களில் புலி திரைப்படமும் ஒன்று. புலி திரைப்படம் இயக்குனர் சிம்பு தேவனால் இயங்கப்பட்ட படமாகும்.

பெரும்பாலும் வித்தியாசமான கதை களங்களை படமாக்கும் சிம்புதேவன் புலி திரைப்படத்தையும் அதே மாதிரி செய்திருந்தார். ஆனாலும் புலி திரைப்படம் தோல்வியை கண்டது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நட்டி நடராஜன் படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

படத்தின் தோல்விக்கான காரணம்:

அதில் அவர் கூறும் பொழுது புலி திரைப்படத்தின் கதை குழந்தைகளுக்கான ஒரு கதையாகும். விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுதே என்னிடம் வந்து எட்டு வயதில் இருந்து 15 வயது குழந்தைகளில் எனக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

Social Media Bar

அவர்களை கவரும் வகையில் நான் எதுவுமே செய்ததில்லை எனவே அவர்களுக்காகத்தான் புலி திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அதேபோல குழந்தைகளுக்கு தேவையான குள்ள மனிதர்கள் பேசும் ஆமை மாதிரியான நிறைய மாயாஜால விஷயங்கள் புலி படத்தில் இருந்தது.

ஆனால் புலி படத்தை விளம்பரப்படுத்தும் போது அதை ஒரு ஆக்ஷன் படமாக விளம்பரப்படுத்தினர். விளம்பரப்படுத்தும் போது அதை குழந்தைகளுக்குக்கான படமாக விளம்பரப்படுத்தி இருந்தால் ரசிகர்கள் அதன் மீது ஒரு ஆக்ஷன் படத்திற்கான எதிர்பார்ப்பை வைத்திருக்க மாட்டார்கள். அப்பொழுது படம் கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்கும் என்று இந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார் நடராஜன்.