Tamil Cinema News
உங்களை மாதிரி அப்பா அண்ணன் உதவியில் வந்தவ இல்ல.. தனுஷை வைத்து செய்த நயன்தாரா.!
சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமானது. அந்த சமயத்தில் அவர்கள் திருமண வீடியோவை வெளியிடுவதற்கான உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.
இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொடுத்ததாக அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை இயக்கும் பொறுப்பு இயக்குனர் கௌதம் மேனனுக்கு கொடுக்கப்பட்டது.
விரைவில் இது வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது வரை அந்த திருமண வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில் இதற்கு தனுஷ் தான் இந்த வீடியோ வெளிவராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வந்தது.
நயன்தாரா காதல்:
ஏனெனில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த படத்தை தயாரித்தது நடிகர் தனுஷ். இந்த நிலையில் அந்த திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் உள்ள சில வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அதற்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அவர்கள் அந்த வீடியோவை வெளியிட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இறுதிவரை தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை இந்த நிலையில் தற்சமயம் தனுஷிடம் ஒப்புதல் வாங்காமலேயே அந்த ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட முடிவு செய்தது.
தனுஷ் நயன்தாரா சண்டை:
ஆனால் அதற்குள்ளாகவே தனுஷ் தற்சமயம் அந்த ஆவணப்படம் குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். மேலும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகவும் கேட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த நயன்தாரா தனுஷை திட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இப்பொழுது அந்த அறிக்கைதான் அதிக பிரபலம் ஆகி வருகிறது. தனுஷ் கோடிக்கு நிறைய சர்ச்சைக்குள்ளான விஷயங்களை பேசி இருந்தார். மேலும் தனுஷ் செல்வராகவன், கஸ்தூரிராஜா போன்ற சினிமா பின்புலத்தை கொண்டு சினிமாவிற்கு எளிதாக வந்தவர் என்றும் நயன்தாரா மட்டும்தான் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் என்றும் நயன்தாரா குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் அவரை விமர்சிக்கும் எக்கச்சக்கமாக பேசியிருக்கிறார் நயன்தாரா.
