Connect with us

நடிக்கிறாங்களா நிஜமான்னு தெரியல.. Nayanthara beyond the fairy tale குறித்து ஒரு பார்வை..!

nayanthara

Movie Reviews

நடிக்கிறாங்களா நிஜமான்னு தெரியல.. Nayanthara beyond the fairy tale குறித்து ஒரு பார்வை..!

Social Media Bar

நயன்தாராவின் வாழ்க்கை வரலாறை பேசும் வகையில் சமீபத்தில் வெளியான ஆவணப்படம்தான் நயன்தாரா Nayanthara beyond the fairy tale. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சினிமா வருகையில் துவங்கி அவருடைய திருமணம் வரை நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.

இந்த ஆவண படத்தை பொருத்தவரை இதற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. அதிகமாக நேர்மறையான விமர்சனங்கள் தான் வருகிறது ஏனெனில் இந்த ஆவணப்படம் முழுக்கவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து மிகவும் விரிவாக பேசப்பட்டிருக்கிறது.

நயன்தாரா ஆவணப்படம்:

அதை பார்ப்பவர்கள் பலருமே இப்படியான ஒரு கணவனோ அல்லது மனைவியோ நமக்கு கிடைத்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் இருவருமே ஒருவருக்காக மற்றொருவர் பிறந்தது போல இருக்கிறது இவர்களது பேச்சு. அதனை தொடர்ந்து பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை பாராட்டி வருகின்றனர். அதையும் தாண்டி நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் தொடர்ந்து எவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டார், எதை எல்லாம் தாண்டி இந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றார் என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.

nayanthara vignesh shivan

nayanthara vignesh shivan

இதையெல்லாம் பார்த்து ஒரு பக்கம் மெய்சிலிர்க்கும் ரசிகர்கள் இருந்தாலும் மற்றொருபுறம் இது குறித்த கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள் இருக்கின்றனர் முக்கியமாக இந்த ஆவணப்படம் துவங்கும் பொழுது திரும்பத் திரும்ப லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை நயன்தாராவே அதிகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆவணப்படத்தில் பிரச்சனை:

எனவே அவருக்கு கண்டிப்பாக அந்த பட்டத்தின் மீது விருப்பம் இருக்கிறது ஆனால் அதை நயன்தாரா வெளிப்படையாக மேடைகளில் பேசுவது கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருமே ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி வருவது நயன்தாராவின் புகழை மக்கள் மத்தியில் இன்னும் அதிகப்படுத்துவதற்காக தானே தவிர வேறொன்றும் இல்லை.

இவர்கள் இருவருமே பேசியது ஏதோ எழுதி வைத்துவிட்டு பேசியது போல தான் இருந்தது என்கின்றனர் ஒரு பக்க ரசிகர்கள். வேண்டுமென்றே நயன்தாராவை மிக நல்லவிதமாக காட்டுவதற்காகதான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

nayanthara vignesh shivan

nayanthara vignesh shivan

பொதுவாக ஆவணப்படம் எடுக்கப்படுகிறது என்றால் உலகத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு விஷயத்திற்காகவோ அல்லது ஒரு தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதற்காகவோ தான் எடுக்கப்படும் அப்படியான எந்த ஒரு அந்தஸ்தும் நயன்தாராவிற்கு கிடையாது என்னும்போது எதற்காக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது என்பது இன்னொரு கேள்வியாக இருக்கிறது.

ஒருவேளை அப்படியான அந்தஸ்தை தான் பெற்றுவிட்டதாக நயன்தாரா நினைக்கிறாரா? ஏனெனில் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் மாதிரியான தமிழ்நாட்டில் இருந்த பெரிய பெரிய நடிகர்களுக்கே இதுவரை ஆவணப்படம் எடுக்கப்படாத பொழுது அவர்களை விட பெரிய அந்தஸ்தை நயன்தாரா பெற்றுவிட்டாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top