ஓ.டி.டிலையே காசு பார்த்தாச்சு – கனெக்ட் படம் அடிச்ச வசூல்!

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் கனெக்ட். இயக்குனர் அஸ்வின் சரவணன் ஏற்கனவே மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய இரு த்ரில்லர் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்த படங்கள். ஆனால் தற்சமயம் வெளியான கனெக்ட் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் ஓ.டி.டியிலேயே அதிக விலைக்கு விற்பனையானதால் இந்த படம் திரையரங்குகளில் பெரிதாக ஓடாவிட்டாலும் கூட படத்திற்கு அதனால் நஷ்டமில்லை என கூறப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில்தான் கனெக்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக படத்திற்கு ஆன செலவு 5 கோடி என கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை 15 கோடிக்கு வாங்கிவிட்டதாம்.

இதனால் படத்திற்கு ஏற்கனவே இரு மடங்கு லாபம் கிடைத்துவிட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் திரையரங்கில் 2 கோடிக்கு படம் ஓடியுள்ளது. எனவே ஏற்கனவே இந்த படம் ஹிட் அடித்துவிட்டது என கூறப்படுகிறது.

Refresh