நயன்தாரா நடித்த கனெக்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனம் அளித்த பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அஸ்வின் சரவணன் முக்கியமான ஹாரர் இயக்குனர் ஆவார். இவர் இயக்கும் ஹாரர் த்ரில்லர் படங்கள் யாவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களாக இருந்துள்ளன.

தமிழில் இதுவரை கேம் ஓவர், மாயா ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களுமே அவருக்கு நல்ல ஹிட் கொடுத்த படங்கள். இதனால் அஸ்வின் சரவணன் படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்சமயம் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இவர் இயக்கி வெளியாக இருக்கும் திரைப்படம் கனெக்ட். இந்த படமும் ஹாரர் படம் என்பதால் இதற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சினிமாவின் முக்கிய புள்ளிகளுக்கு திரையிடப்பட்டது. இந்த படம் மிகவும் பிரமாதமாக உள்ளது என பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். மொத்தமே இந்த படம் 99 நிமிடங்கள்தான் என கூறப்படுகிறது.

படத்தில் சத்தங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பார்ப்பவரை பயமுறுத்தும் வகையில் சத்தங்கள் அமைந்துள்ளன. படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த படம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என பரிந்துரைக்கின்றனர்.

Refresh