Connect with us

முதன் முதலில் அது சிம்புவுடன் தான் நடந்துச்சு.. நயன்தாராவை அனுப்பி வைத்த இயக்குனர்!.

News

முதன் முதலில் அது சிம்புவுடன் தான் நடந்துச்சு.. நயன்தாராவை அனுப்பி வைத்த இயக்குனர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டார் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகளில் எல்லா நடிகைகளும் நல்ல வரவேற்பு பெற்று விடுவது கிடையாது.

முக்கியமாக பெரும் நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததால் மட்டும் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்து விடுவது கிடையாது. ஆனால் நயன்தாரா அந்த விஷயத்தில் வித்தியாசமானவர். முதல் திரைப்படமாக அவருக்கு சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். ரஜினிகாந்த்தோடு நடித்த பிறகும் கூட அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது சின்ன நடிகையாக இருந்த நயன்தாரா கிடைத்த பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்தார்.

சினிமா வளர்ச்சி:

பொதுவாக மலையாள நடிகைகள் இப்போதைய காலகட்டங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒப்புக் கொள்வது கிடையாது. ஆனால் நயன்தாராவை பொருத்தவரை அவர் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் நடிப்பதற்கு தயாராக இருந்தார்.

அதனை தொடர்ந்துதான் சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே கஜினி திரைப்படத்தில் அவ்வளவு மோசமான கவர்ச்சியில் நடித்திருந்தார். பில்லா படத்தில் டூ பீஸ் உடையில் நடிக்க வேண்டும் என்று கூறிய பொழுது அசின் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்காக அந்த படத்தில் இருந்தே விலகினார் அசின். ஆனால் நயன்தாரா அதை ஒப்புக்கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்தார் அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் .

முதல் படமேவா?:

இதனால் சினிமாவில் பெரும் வளர்ச்சியும் கண்டார். தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். அதனால் சின்ன இயக்குனர்கள் நயன்தாராவை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதன் முதலில் நயன்தாராவிற்கு உண்மையிலேயே ஐயா திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது தொட்டி ஜெயா திரைப்படத்தில்தான் நயன்தாராவிற்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

தொட்டி ஜெயா திரைப்படத்தில் சிம்புதான் கதாநாயகனாக நடித்தார். சிம்பு நயன்தாராவுக்கும் இருந்த காதல் பிரச்சனைகள் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஒரு வேலை முதல் திரைப்படம் சிம்பு திரைப்படத்தில் நடித்திருந்தால் அப்பொழுதே காதல் வசப்பட்டு இருப்பாரா  நயன்தாரா என்று இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த திரைப்படத்தில் கமிட்டான பொழுது நயன்தாராவின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கூறி இயக்குனர் அவரை அந்த படத்தில் இருந்து விலக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

To Top