அழகா க்யூட்டா இருக்கீங்க – நஸ்ரியாவின் பளபளக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பிரபலமான நடிகைகளில் நஸ்ரியா மிக முக்கியமானவர். இவர் தமிழில் முதன் முதலில் நேரம் என்ற படத்தில் நடித்தார். இந்த படமே இவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது.

Social Media Bar

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் நஸ்ரியா, குழந்தை போல அவர் கொண்டிருக்கும் க்யூட் எக்ஸ்ப்ரஸன்களால் வெகுவான ரசிகர்களை பெற்றார் நஸ்ரியா.

ஆனால் சில காலங்கள் கழித்து நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டதால் சினிமாவில் இருந்து விலகினார். பிறகு சில வருடங்கள் இவர் சினிமாவில் நடிக்கவே இல்லை.

வெகு நாட்கள் கழித்து அடடே சுந்தரா என்கிற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளை உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.