Cinema History
முதலமைச்சர் ஆகணும், அதான் என் ஆசை – பயப்படாமல் கூறிய த்ரிஷா
கில்லி, திருப்பாச்சி என துவங்கி இப்போது வரை தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை த்ரிஷா. திரிஷாவை படத்தில் பார்க்கும் பலரும் மற்ற நடிகைகளை போலவே த்ரிஷா அமைதியான பெண் என நினைக்கலாம்.

ஆனால் அவர் பயங்கர ஜாலியான ஒரு ஆள் ஆவார். சினிமாவிற்கு வந்த புதிதில் பல பேட்டிகளில் பேசும்போது கூட த்ரிஷா மிகவும் ஜாலியாக பேசுவதை பார்த்திருக்கலாம். இப்படி ஒரு பேட்டியில் பேசும்போது “கதாநாயகி ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருந்ததா? என கேட்கப்பட்டது.
அதற்கு த்ரிஷா இல்லை. எனக்கு கதாநாயகி ஆகும் ஆசையெல்லாம் இல்லை. நான் மாடலிங் துறையில்தான் இருந்தேன். வாய்ப்பு கிடைத்ததால் கதாநாயகி ஆனேன்.” என வெளிப்படையாக கூறினார்.
சரி எதிர்காலத்தில் என்ன ஆகணும்னு ஆசைப்படுறிங்க என அவரிடம் கேட்கப்பட்டது. அடுத்து சி.எம் ஆகணும்னு ஆசைப்படுறேன். நீங்க வேணா பாருங்க இன்னும் 10 வருஷத்தில் சி.எம் ஆகிடுவேன் என கூறினார்.
ஒரு ஜாலி மனநிலையில் அப்போது த்ரிஷா கொடுத்த இண்டர்வுயூக்களை பார்க்கும்போது அதை இப்போது இருக்கும் பெரிய நட்சத்திரங்களே பேசுவதற்கு அஞ்சும் விஷயங்களாக உள்ளன.
