News
கிருஸ்துவ அடையாளமாக வெளியான விஜய் கட்சி கொடி.. ஒருவேளை உண்மையா இருக்குமோ?. என்னன்னு நீங்களே பாருங்க!.
இன்று காலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிவித்தது முதலே இதுக்குறித்த செய்திகள்தான் இணையம் முழுக்க பரவி வருகிறது. இரண்டு பக்கமும் சிவப்பாக நடுவில் மட்டும் மஞ்சளாக இந்த கொடி இருக்கிறது. அதில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் நிற்கின்றன.
நடுவில் வாகை பூ இருக்கிறது. அதனை சுற்றி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த கொடிக்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்து வந்த நிலையில் அதற்கு சீக்கிரத்தில் விளக்கம் அளிக்கிறேன். மேலும் கட்சியின் கொள்கைகள் குறித்தும் அப்போது பேசப்பட இருப்பதாக கூறியிருந்தார் தளபதி விஜய்.
கிருஸ்துவ அடையாளம்:
இந்த நிலையில் இந்த கொடிக்கு என்ன அர்த்தம் இருக்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே ரசிகர்கள் பலரும் இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று டீ கோடிங் செய்ய துவங்கிவிட்டனர்.

பிறப்பால் விஜய் ஒரு கிருஸ்துவர் என்பது பலரும் அறிந்த விஷயமே.. இந்த கொடிக்கும் கிருஸ்துவ மதத்திற்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதன்படி பார்க்கும்போது கிருஸ்துவ மதத்தில் ஒரு காலக்கட்டத்தில் மதம் மாற்றத்திற்காக சிலுவை போர் என்கிற விஷயம் நடந்தது.
அதில் மதம் மாறாதவர்களை ஒரு குழு கொன்று குவித்து வந்தது. அந்த காலக்கட்டத்தில் புனிதப்போர் குழுவின் கொடியில் சிவப்பும் மஞ்சளும்தான் நிறங்களாக இருந்தன. சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தையும், மஞ்சள் அவருடைய பரிசுத்த ஆன்மாவையும் பறைசாற்றுவதாக இருந்தது.
நட்சத்திர காரணம்:
அதே போல அந்த கொடியில் வாகை பூவை சுற்றி 28 நட்சத்திரங்கள் இருப்பதை பார்க்க முடியும். கிருஸ்துவ பைபிளில் 28 முக்கிய எண்ணாகும். பழைய ஏற்பாட்டை 28 நபர்கள் சேர்ந்து எழுதியதாக கூறப்படுகிறது.
அதே போல 28 முறை பைபிளில் அல்லேலூயா வசனம் வருகிறது. இந்த 28 நட்சத்திரங்களில் 5 மட்டும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்கிறது. இந்த ஐந்து என்பது இயேசுவின் தந்தையான கடவுளின் கருணையை குறிக்கும் என கூறப்படுகிறது.
அதே போல விவிலியத்தை பொறுத்தவரை யானை என்பது ஆட்சியின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இதனை எல்லாம் குறியீடாக கொண்டுதான் தமிழக வெற்றி கழக கொடி அமைந்துள்ளதாக ஒரு பேச்சு உலாவி வருகிறது.
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
