Tamil Cinema News
ராம்கியால் வந்த அந்த பழக்கம்.. 25 வருஷமா விடாம.. ஓப்பன் டாக் கொடுத்த நீரோஷா..!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த நடிகர் ராம்கி ஆரம்பத்தில் நிறைய படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார் ராம்கி. அதற்கு பிறகு வாய்ப்புகள் என்பதே அவருக்கு இல்லாமல் போனது.
ஆனாலும் நடிப்பை பொறுத்தவரை அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் ஏன் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் சில மணிநேர சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் ராம்கி நடித்திருந்தார்.
ஆனால் கதையின் மிக முக்கிய கதாபாத்திரமாக அந்த கதாபாத்திரம் இருந்தது. அதனால் ராம்கிக்கு மீண்டும் வரவேற்பு கிடைத்தது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான பிறகு துல்கர் சல்மானை விட ராம்கிக்குதான் அதிக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பெற துவங்கி இருக்கிறார் ராம்கி. ராம்கியின் மனைவியாக இருந்தவர் நடிகை நிரோஷா நிரோஷாவும் ராம்கியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து ஒரு பேட்டியில் நீரோஷா பகிர்ந்து கொண்டபொழுது ராம்கிக்கு அசைவம் சாப்பிடுவது பிடிக்காது.
எனவே திருமணம் செய்து கொண்ட பிறகு நான் சைவத்திற்கு மாறிவிட்டேன் கிட்டத்தட்ட 25 வருடங்களாக நான் விடாமல் சைவ பழக்கத்திலேயே இருந்தேன். ராம்கிக்காக நான் அதை செய்தேன். ஆனால் எனது உடல்நிலை ஒரு கட்டத்தில் மோசமான பொழுது மருத்துவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அப்பொழுது ராம்கி அசைவம் சாப்பிடு என்று என்னிடம் கூறினார் அதன் பிறகு தான் நான் அசைவம் சாப்பிட துவங்கினேன் என்று கூறியிருக்கிறார் நிரோஷா.
