Bigg Boss Tamil
பொண்ணாடி நீ… பிக்பாஸை விட்டு வெளியே போடி… ட்ரிக்கர் ஆன நிக்சன்!.. சம்பவம் இருக்கு!..
Biggboss Archana and Nixen : வந்த புதிதில் எவ்வளவுக்கு அழுது கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாரோ அந்த அளவிற்கு வலிமையாகி இருக்கிறார் அர்ச்சனா. எவ்வளவு பேர் அவரிடம் பிரச்சனை செய்தாலும் சரி அதே சமயம் அவர் மற்றவர்களிடம் பிரச்சனை செய்தாலும் சரி எதிரில் இருப்பவர்கள்தான் நிலை குலைகிறார்களே தவிர அர்ச்சனா வலிமையாக இருக்கிறார்.
பிக்பாஸ் விளையாட்டை பொறுத்தவரை அடுத்தவர்களிடம் பிரச்சனை செய்து எப்போதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த விளையாட்டில் நிற்க முடியும். இதை மூன்றாவது வாரமே சரியாக புரிந்துக்கொண்டார் மாயா.
அதுவரை யாராலும் அறியப்படாதவராக இருந்தவர் கேப்டன் ஆனவுடன் பல பிரச்சனைகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்சமயம் அதே யுக்தியை அர்ச்சனா பின்பற்றுகிறார். அதில் நிக்சன் தான் தற்சமயம் சோதனை எலியாக சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே பிரதீப்பை விட நிக்சன் தான் பெண்கள் விஷயத்தில் அதிகமாக அடி வாங்கி வருகிறார். நிக்சன் ஐஸு பின்னாடி சுற்றி கொண்டிருக்கும்போதே அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.
அதற்கு முன்பு வினுஷாவின் உடல் அமைப்பை தவறாக அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. வெளியில் வந்த பிறகு வினுஷாவே நிக்சனை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் அர்ச்சனாவிடம் பேசும்போது ஏற்கனவே வினுஷா விஷயத்தில் நிகசனுக்கு வெளியில் கெட்ட பெயர் இருப்பதை அர்ச்சனா கூறினார்.
அதை மட்டும் பேசாதே என கூறிய நிக்சன் பேசி கொண்டிருக்கும்போதே அர்ச்சனா மரியாதை இல்லாமல் போடா என கூறினார். இதனால் கடுப்பான நிக்சன் பொண்ணாடி நீ… நீ மொதல்ல போடி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டே போடி என சத்தம் போட துவங்கிவிட்டார். அவர் இப்படி சத்தம் போடுவார் என தெரிந்தேதான் அர்ச்சனா இதை செய்தாரா என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.
