விரைவில் வரும்.. தனது படம் குறித்து அப்டேட் வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர்..!
Youtube மூலமாக பலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்து வருகின்றனர். அப்படியாக பிரபலமடைந்து வருபவர்களில் முக்கியமானவர்களாக பரிதாபங்கள் என்னும் சேனலை நடத்தி வரும் கோபி சுதாகர் இருந்து வருகின்றனர்.
வெகு காலங்களாகவே இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர்கள் மக்களிடம் பணத்தை வசூல் செய்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்தனர்.
ஆனால் அப்படி வசூல் செய்ததில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை காரணமாக அந்த படம் எடுக்கப்படாமல் போனது. அது கோபி சுதாகருக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்கி இருந்தது.
இந்த நிலையில் திரும்பவும் காசு சேர்த்து ஓ காட் பியூட்டிஃபுல் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நடிக்கும் இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேடும் வராமல் இருந்த நிலையில் தற்சமயம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இதன் முதல் சிங்கிள் பாடலானது விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.