எண்டர்டெயிண்ட்மெண்ட் காதல் ஸ்டோரி.. ஓஹோ எந்தன் பேபி ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே காதல் திரைப்படங்களுக்கும் பேய் படங்களுக்கும் அதிகம் வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது.

காதல் படங்களை பொறுத்தவரை பெரிதாக கதை அம்சத்தை கொண்டு இல்லாவிட்டாலும் கூட காதலை நன்றாக வெளிப்படுத்தும் படங்களாக இருந்தாலே போதும் என்கிற நிலை இருக்கிறது.

ஏனெனில் படத்தில் வரும் காதல் காட்சிகளை தன்னுடைய வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடிந்தால் மட்டுமே மக்கள் அந்த படத்தை வெற்றி அடைய செய்கின்றனர்.

இந்த நிலையில் ஓஹோ எந்தன் பேபி என்கிற திரைப்படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. பள்ளிப்பருவ காதல் மற்றும் கல்லூரி காதலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான ஒரு காதல் கதையாக இல்லாமல் வித்தியாசமாக ஏதாவது இந்த படத்தில் இருக்கும் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன நடிகர் மிஷ்கின் மற்றும் விஷ்ணு விஷால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.