Connect with us

மாரி செல்வராஜ் எடுக்குற அந்த சீன்லாம் எனக்கே முடியல.. நான் அந்த மாதிரிலாம் படம் பண்ண மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த பா.ரஞ்சித்

pa ranjith mari selvaraj

News

மாரி செல்வராஜ் எடுக்குற அந்த சீன்லாம் எனக்கே முடியல.. நான் அந்த மாதிரிலாம் படம் பண்ண மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த பா.ரஞ்சித்

Social Media Bar

தமிழ் சினிமாவில் தற்போது பல இயக்குனர்கள் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் சில இயக்குனர்கள் தங்களின் தனித்துவமான இயக்கத்தின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் ஒரு சில இயக்குனர்கள் குறிப்பிட்ட ஜானரில் படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நிலையில் அது மக்களிடையே சர்ச்சையையும், விமர்சனங்களையும் பெற்று வருவதை நாம் கவனித்து வருகிறோம்.

அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ். இவர்களின் படங்கள் தனித்துவமாக இருந்தாலும் மக்களுக்கு தெரிவிக்க வரும் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒன்று போல் தான் இருக்கும். அந்த வகையில் இவர்களின் படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தற்போது மாரி செல்வராஜை பற்றி பா. ரஞ்சித் கூறியிருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ்

தமிழ் திரையுலகின் பிரபலமாக அறியப்படும் இயக்குனரில் ஒருவராக மாரி செல்வராஜ் இருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

mari-selvaraj

இவரின் முதல் படத்திலிருந்து பல நேர்மறையான விமர்சனங்களை பெற்று அந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கியும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார்.

இவர் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ணன், 2023 ஆம் ஆண்டு மாமன்னன் என்ற திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்தாண்டு சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பற்றி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மாரி செல்வராஜ் பற்றி பா. ரஞ்சித்தின் கருத்து

மாரி செல்வராஜ் பற்றி பா. ரஞ்சித் கூறும் போது அவருடைய படம் தனித்துவமாக இருக்கும் என்னுடைய படம் முற்றிலும் வேறு மாறியாக இருக்கும். அவரைப் போன்று என்னால் நிச்சயம் படம் எடுக்க முடியாது எனக் கூறிய அவர், பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அவரின் அப்பாவை அடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் என்னால் எடுக்க முடியாது.

Pa-Ranjith-

மாரி செல்வராஜ் மிகவும் எமோஷனலான பர்சன். அவரால் மட்டும் தான் இது போன்ற காட்சிகளை எல்லாம் எடுக்க முடியும். என்னால் நிச்சயம் முடியாது. அந்தக் காட்சியை பார்த்துவிட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

நான் மாரி செல்வராஜிடமும் கேட்டேன். இந்த சீன் எல்லாம் ஓகேவா? பரவாயில்லையா? என்று ஆனால் மாரி செல்வராஜுக்கு இதெல்லாம் காட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சி தவறானது அல்ல என பா. ரஞ்சித் மாரி செல்வராஜ் போட்டியில் கூறியிருக்கிறார்.

To Top