இரண்டு நாட்களில் மதராஸி திரைப்படத்தின் மொத்த வசூல்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி, இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலும் ஏ.ஆர். முருகதாஸை பொருத்தவரை சமூகம் சார்ந்த மிக முக்கியமான விஷயங்களை தனது திரைப்படங்களில் பேசக்கூடியவர். அவர் இயக்கத்தில் வந்த ரமணா,கத்தி,சர்க்கார் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலுமே சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் ஒரு காலத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகராக இருந்தவர் நடிகர் […]

Continue Reading

கவர்ச்சி காட்டுனாதான் மார்கெட்.. இயக்குனரை அதிர வைத்த நயன்..!

தமிழ் சினிமாவில் ஐயா, சந்திரமுகி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலமாகி வெகு சீக்கிரத்திலேயே பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்திலேயே இவருக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சீக்கிரத்திலேயே அதிக பிரபலம் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு அண்ணாத்த, தர்பார் என்று இன்னும் நிறைய திரைப்படங்களில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் நடித்த பொழுது அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். தமிழ், மலையாளம் என்று பல மொழிகளிலும் […]

Continue Reading

23 படங்களில் நான் செய்யாத விஷயம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மிக குறைவான காலகட்டங்களிலேயே தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளே முக்கிய காரணம் என்று கூறலாம். கடைசியாக இவர் நடித்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது ஒவ்வொரு படத்தின் கதைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் […]

Continue Reading

உடல் எடை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்த நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே..!

இளம் வயதிலேயே மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஒரு புகழ் பெற்ற நடிகராக இவர் இருந்து வருகிறார். முக்கியமாக தமிழில் கமல் ரஜினிகாந்த் என்ற இரண்டு பேரும் […]

Continue Reading

சாய் அபயங்கர் சரிப்பட்டு வருவாரா..! வெளியான DUDE first Single

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட ஒரு வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக DUDE இருக்கிறது. இந்த திரைப்படத்தை கீர்த்திஸ்ரன் இயக்கியிருக்கிறார். நடிகை மமிதா பைஜு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பொதுவாகவே இளைஞர்களின் வாழ்க்கையை குறிப்பிடும் வகையிலான கதைகளத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். பெரும்பாலும் வேலைக்கு செல்லாமல் ஊர்சுத்தி கொண்டிருக்கும் ஜாலியான ஒரு இளைஞர் […]

Continue Reading

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

தமிழிலும் மலையாளத்திலும் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் பிரியதர்ஷன் இவரது மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். அடிப்படையில் ஒரு மலையாள இயக்குனர் என்பதால் பிரியதர்ஷன் தனது மகளை மலையாளத்தில் தான் அறிமுகப்படுத்தினார். மலையாளத்தில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி. தமிழை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மற்றபடி தமிழில் […]

Continue Reading

கமலுடன் நடிக்கும் வாய்ப்பை கை விட்ட ஆர்.ஜே பாலாஜி.. இதுதான் காரணம்..!

தமிழில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்பொழுது இயக்குனர் நடிகர் என்று பல பரிமாணங்களை எடுத்திருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி ஆரம்பத்தில் காமெடி நடிகராக வந்தாலும் கூட பிறகு வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தியதன் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜிதான் இயக்கி வருகிறார். இதற்கு முன்பே வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை ஆர்.ஜே பாலாஜி இயக்கி […]

Continue Reading

ரஜினிக்காக நடிக்க இருந்த படம்.. பாலா நடிக்கிறார். வெளிவந்த அப்டேட்..!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பாலா. அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை இன்னும் அதிக பிரபலம் ஆக்கியது அதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே பலருக்கும் நன்மைகளையும் செய்து வந்தார். அதனை தொடர்ந்து சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பாலாவிற்கு […]

Continue Reading

தொடர்ந்து வரும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..! ராமரின் ஆயுதத்தை கைப்பற்றும் கதாநாயகன்.. வெளியான மிராய் ட்ரைலர்.!

தொடர்ந்து தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நிறைய பக்தி பாடல்களும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களும் தென்னிந்தியாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிறைய இந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த படங்களுக்கும் வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து தெலுங்கில் மிராய் என்கிற ஒரு திரைப்படம் வரவிருக்கிறது. இந்த படம் தமிழில் வெளியாக இருக்கிறது. 12 […]

Continue Reading

ப்ளாக் பஸ்டர் வெற்றி கொடுத்த கூலி திரைப்படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருந்தது. அதனாலேயே படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 151 கோடி ரூபாய் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து படம் எப்படியும் ஒரு பெரிய வசூலை கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கான வசூல் என்பது குறைந்தது. ஏனெனில் படம் கொஞ்சம் எதிர்மறையான […]

Continue Reading

டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு கை கொடுத்த ரஜினி மகள்..!

24 வயதிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அபிஷன் ஜீவந்த். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் கதாநாயகனை மட்டுமே பாராட்டி வந்தனர் ஆனால் இப்பொழுதெல்லாம் இயக்குனர் வரை அனைவரையுமே பார்க்க துவங்கியிருக்கின்றனர் மக்கள். அதேபோல டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிஷன் ஜீவந்த். இந்த நிலையில் அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து […]

Continue Reading

சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே சிறப்பான சண்டை காட்சிகளுக்கு அவை பெயர் பெற்றவை என்று கூறலாம். இன்னமும் கூட தமிழில் அந்த அளவிற்கான சண்டை காட்சிகளை உருவாக்க முடியவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் SISU: Road to Revenge  என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது ஒரு தனி மனிதனை சோவியத் ராணுவமே தேடி வருவதாக கதை அம்சம் இருக்கிறது. அவரை கொல்வதற்கான ஆணை […]

Continue Reading