News
பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்குதான் ஆதரவு… அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் மக்கள்.!
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிகழ்ந்து வருகிறது. பஹல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது அதிக அதிருப்தியில் இருந்தது.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் பாகிஸ்தானின் பகுதிகளில் இந்தியா தனது முதல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியாத விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பலூஜ் மற்றும் பஸ்தூன் என்கிற இரு பிரிவினர் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் ஆதரவை இந்தியாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் உள்நாட்டு போர் நடக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன. போர் சமயத்தில் உள்நாட்டு போர் என்றால் அது பாகிஸ்தானை வெகுவாக பாதிக்கும் என்பதால் அடுத்த பாகிஸ்தானின் நகர்வு என்னவாக இருக்கும் என அனுமானிக்க முடியவில்லை.
