Connect with us

அந்த படத்துல பிரகாஷ் ராஜ்க்கு பதிலா பாக்கியராஜை போடுங்க!.. எடிட்டரின் ஆலோசனையில் ஹிட் கொடுத்த திரைப்படம்!..

prakash raj bhagyaraj

Cinema History

அந்த படத்துல பிரகாஷ் ராஜ்க்கு பதிலா பாக்கியராஜை போடுங்க!.. எடிட்டரின் ஆலோசனையில் ஹிட் கொடுத்த திரைப்படம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன்களில் முக்கியமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பெரும் நடிகர்களிடனும் வில்லனாக நடித்துள்ளார். ஒரு காலத்தில் பிரகாஷ் ராஜை பார்த்தாலே பயம் வரும் அளவிற்கு மோசமான வில்லனாக இருந்தார்.

ஆனால் ஒரு நடிகராக அவர் அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக செய்ய கூடியவராக இருந்ததால் அடுத்தடுத்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அவர் நடித்த அபியும் நானும் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து தயாரான திரைப்படம் உனக்கும் எனக்கும், அந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் தந்தை கதாபாத்திரத்திற்கு பிரகாஷ் ராஜை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார் தயாரிப்பாளர். ஏனெனில் அது கொஞ்சம் நகைச்சுவையான கதாபாத்திரம்.

ஆனால் படத்தின் எடிட்டர் அதுக்குறித்து கூறும்போது அந்த கதாபாத்திரத்திற்கு பாக்கியராஜ் நன்றாக இருப்பார் என கூறியுள்ளார். அதே போல த்ரிஷாவின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு பிரபு சரியாக இருப்பார் என கூறுகிறார்.

இந்த ஆலோசனை இயக்குனருக்கு சரி என தோன்றினாலும் தயாரிப்பாளருக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வற்புறுத்தி அவர்கள் இருவரையும் நடிக்க வைத்தார் இயக்குனர். கடைசியில் அவர்கள் நடிப்புதான் நல்ல வெற்றியை கொடுத்தது.

To Top