Connect with us

சட்டத்துக்கு புறம்பா எதுவும் பண்ணல.. வாய்க்கு வந்ததை பேசாதீங்க.. நெட்டிசன்களுக்கு வார்னீங் கொடுத்த சுஜிதா…

pandian stores actress sujitha

News

சட்டத்துக்கு புறம்பா எதுவும் பண்ணல.. வாய்க்கு வந்ததை பேசாதீங்க.. நெட்டிசன்களுக்கு வார்னீங் கொடுத்த சுஜிதா…

Social Media Bar

sujitha: அனைவரின் மத்தியிலும் தற்பொழுது பிரபலமாக இருப்பவர் சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர் பல சீரியல்களில் நடித்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் அவர் மூத்த அண்ணியாக நடித்திருப்பார்.

மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனங்களிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் சுஜிதா.

இவர் யூடியூப் சேனலில் சுற்றுலா சென்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இது தற்பொழுது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சுஜிதாவின் யூடியூப் சேனல்

சுஜிதா பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தாலும் அவர் youtube சேனல் ஒன்று வைத்திருக்கிறார். அதில் அவர் சுற்றுலா செல்லும் இடங்கள் மற்றும் வீட்டில் செய்யும் வேலைகள் போன்றவற்றை பதிவிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்பொழுது மருதமலை சென்று இருக்கிறார். மருதமலை அடிவாரத்தில் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கு பசுமை நிறைந்த இடங்களாக இருப்பதால் இவர் youtube வீடியோவிற்காக அவர் நண்பரிடம் அனுமதி பெற்று அவரின் வீட்டையும் அங்கு சுற்றியுள்ள சூழலையும் பதிவு செய்திருக்கிறார்.

சிக்கலில் சிக்கிய சுஜிதா

இவ்வாறு அவரின் நண்பரின் வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு இருந்த இரண்டு துப்பாக்கிகளை பற்றி அவரின் நண்பரிடம் விசாரித்து இருக்கிறார். அவரின் நண்பர் இது ஒரிஜினல் துப்பாக்கி தான் ஏர் ரைபிள் வகையை சார்ந்தது என்பதால் இதற்கு உரிமம் தேவை இல்லை என அவர் கூறியிருக்கிறார். மேலும் ஏர்கன்ஸ் குண்டு போட்டு லோடு செய்து டார்கெட் பிக்ஸ் பண்ணி சுட்டால் சுடலாம் என கூறியிருக்கிறார்.

sujitha

மேலும் இந்த வீடியோவை தன்னுடைய youtube சேனலில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பெரும் சிக்கல் உண்டாகியது. ஏனென்றால் வனப்பகுதியில் ஒரு வீட்டில் இவ்வாறு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வனப்பகுதியில் இவ்வாறு துப்பாக்கி வைத்திருப்பது அங்குள்ள வனவிலங்குகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளது எனவும், இது உண்மையில் ஏர்கன் துப்பாக்கிகள் தானா என பலரும் பலவிதமான கமெண்டை பதிவு செய்து வந்தார்கள்.

இவ்வாறு பிரச்சனைகள் வந்ததும் சுஜிதா இந்த வீடியோவை அவரின் youtube சேனலில் இருந்து நீக்கிவிட்டார். மேலும், இது குறித்து சுஜிதா தெரிவித்திருப்பதாவது, அங்குள்ள இயற்கை சூழலையும், அவர் வீட்டையும் அவரின் அனுமதியுடன் நான் வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டேன். ஆனால் அங்கு இருந்த இரண்டு ஏர்கன் துப்பாக்கிகள் வைத்து அவர் எவ்வாறு இதெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என பலரும் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

pandian stores actress sujitha

வாய்க்கு வந்ததை எல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். வனவிலங்கு வேட்டையாடுவதற்காக துப்பாக்கி வைத்திருக்கிறார் என சர்ச்சையான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் என்னுடைய நண்பர் எனக்கு போன் செய்து இவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என சிரித்தார். ஆனால் எங்களுக்கு வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து எந்த ஒரு போனும் வரவில்லை. எனவே இது ஒரு தேவையில்லாத ஆணி என சுஜிதா தெரிவித்திருக்கிறார்.

To Top