சமூக பிரச்சனையை கையில் எடுத்த பரிதாபங்கள் சேனல்.. இணையத்தில் இப்போ இதான் ட்ரெண்டிங்..!
யூ ட்யூப்பை பொறுத்தவரை ஒரு கேளிக்கைக்கான விஷயமாகதான் யூ ட்யூப் எப்போதும் இருந்து வருகிறது. மக்களும் பெரும்பாலும் கேளிக்கை தொடர்பான விஷயங்களை பார்ப்பதற்காகதான் யூ ட்யூப் வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமான சேனலாக பரிதாபங்கள் சேனல் இருந்து வருகிறது.
சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை காமெடியாக இந்த சேனலில் உள்ள கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் பேசி வருகின்றனர். திருமண பரிதாபங்கள், உறவினர் பரிதாபங்கள், கல்லூரி பரிதாபங்கள் என பலதரப்பட்ட வீடியோக்களை இவர்கள் பதிவிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்கள் அரசியல் சார்ந்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். பல அரசியல்வாதிகளை காமெடியாக சித்தரித்து அவர்கள் இந்த வீடியோக்களை செய்திருந்தனர். இதனால் இவர்களுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன.
எனவே அந்த மாதிரி வீடியோக்கள் போடுவதை இவர்கள் நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து சாதிய படுகொலைகள் நடப்பதை தொடர்ந்து சாதிய வாதிகளை குறித்து அவர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோதான் சொசைட்டி பாவங்கள்.
இந்த வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது இணையத்தில் இந்த வீடியோ அதிக வைரலாகி வருகிறது.