Cinema History
பாக்கியராஜ் சொன்ன அந்த விஷயம்.. தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் பண்ணுனது இல்ல.. உண்மையை உடைத்த பார்த்திபன்
லோகேஷ் கனகராஜை விடவுமே ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்தவர்தான் இயக்குனர் பாக்யராஜ். பாக்கியராஜிடம் இருக்கும் சிறப்பம்சமே அவர் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து அதிக வசூல் கொடுக்க கூடியவர்.
இந்த காரணத்தாலேயே அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் எல்லாம் போட்டி போட்டு வந்தனர். ஒவ்வொரு வாரமும் பாக்கியராஜை சந்திப்பதற்காகவே வரிசைக்கட்டி ஆட்கள் நிற்பார்களாம். அவர்கள் கொடுக்கும் மாலையை வாங்கி வைக்கவே நான்கு உதவி இயக்குனர்களை வைத்திருந்தாராம் பாக்கியராஜ்.
பாக்கியராஜ் சிறந்த இயக்குனர் என்பதாலேயே அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அப்படி பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன்.
அவர் பாக்கியராஜுடன் பணிப்புரிந்த அனுபவம் குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது பொதுவாக இயக்குனர்கள் உதவி இயக்குனர்களுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகளை கொடுத்துவிட மாட்டார்கள். ஆனால் பாக்கியராஜ் எனக்கு இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கொடுத்தார்.
முதல் படம் முடிந்து இரண்டாம் படம் எடுக்கும்போது படத்தின் சில காட்சிகளை என்னை எடுக்க சொன்னார். எனக்கு அதெல்லாம் எடுக்க தெரியாது என நான் கூறினேன். அதெல்லாம் உன்னால் முடியும் எடு என்று கூறினார் பாக்கியராஜ். அதே மாதிரி சில காட்சிகளை எடுத்தேன்.
நன்றாக வந்தது. பிறகு பாக்கியராஜ் என்னை பாராட்டினார். என் திறமை என்னவென்று நானே அறியாதபோது அதை என்னிடம் இருந்து அறிந்தவர் இயக்குனர் பாக்கியராஜ் என அந்த செய்தியை பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.
