என் வெற்றியின் ரகசியம் இதுதான்! – வெளிப்படுத்திய வைரமுத்து!
தமிழின் முக்கிய கவிஞர்களில் கண்ணதாசன், வாலி வரிசையில் அடுத்து இருப்பவர் கவிஞர் வைரமுத்து. கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூட வைரமுத்து பாடல் வரிகள் எழுதவில்லை என பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். ஆரம்ப காலக்கட்டங்களில் வைரமுத்து சினிமாவிற்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
சினிமாவில் இயக்குனர் பாரதி ராஜாதான் இவருக்கு முதன் முதலாக வாய்ப்புகள் கொடுத்தார். இது ஒரு பொன்மாலை பொழுது என்கிற பாடலுக்குதான் வைரமுத்து முதன் முதலாக பாடல் வரிகள் எழுதினார்.
அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. அவரது வெற்றி குறித்து ஒரு பேட்டியில் வைரமுத்து கூறும்போது “எனது வெற்றிக்கு எனது குடும்பமே முக்கிய காரணம். எப்போதும் அவர்கள் எனக்கு உதவியாக இருந்துள்ளார்கள். படங்களுக்கு பாடல் வரிகள் எழுதும்போது எனக்கு தனிமை தேவைப்படும். அப்போது எல்லாம் எனக்கு எந்த தொந்தரவும் தராமல் அமைதியாக இருப்பார்கள்.” என கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு குடும்பத்தின் உதவி இருந்த காரணத்தால்தான் உயர்ந்து வந்தேன் என கூறியுள்ளார் வைரமுத்து.