Connect with us

உன்ன விட பெரிய இசையமைப்பாளரும் இருக்காங்க!.. இளையராஜாவிற்கு சாட்டையடி பதில் கொடுத்த வைரமுத்து!.

vairamuthu ilayaraja

Cinema History

உன்ன விட பெரிய இசையமைப்பாளரும் இருக்காங்க!.. இளையராஜாவிற்கு சாட்டையடி பதில் கொடுத்த வைரமுத்து!.

Social Media Bar

Ilayaraja vairamuthu : தமிழ் சினிமாவில் இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவருமே ஒரே நேரத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவையே மாற்றி அமைத்தனர் என கூறலாம்.

இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து காம்போவில் அப்போது பல படங்கள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆனால் காலங்கள் செல்ல செல்ல மூவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் இளையராஜாவும் வைரமுத்துவும் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாகவே பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் எந்த மேடை விழாவிற்கு போனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் நிராகரித்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனை பெரிதானது. இந்த நிலையில் பாடகி பி.சுசிலாவிற்கு விருது வழங்கும் ஒரு விழாவிற்கு இவர்கள் இருவருமே வந்திருந்தனர்.

ilayaraja-2
ilayaraja-2

அப்போது மேடையில் சென்று பேசிய இளையராஜா, தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு இணையான இன்னொரு கவிஞர் கிடையாது என வைரமுத்துவை குறிக்கும் விதமாக பேசினார் இளையராஜா. இந்த பேச்சு வைரமுத்துவிற்கு பெரும் கோபத்தை உருவாக்கியது.

பிறகு மேடையில் வந்து பேசிய வைரமுத்து கண்ணதாசனுக்கு இணையான ஒரு கவிஞர் கிடையாது என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் உலகிலேயே எம்.எஸ் விஸ்வநாதனுக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் கிடையாது என பதிலுக்கு வன்மம் தீர்த்திருந்தார் வைரமுத்து. அந்த அளவிற்கு அவர்களுக்குள் சண்டை இருந்தது.

இப்போது வரை அவர்கள் இருவரும் இணையவே இல்லை என்றாலும் சினிமாவில் முக்கியமான புள்ளிகளாக இளையராஜாவும் வைரமுத்துவும் இருக்கின்றனர்.

To Top