Movie Reviews
வரதட்சணைக்கு நகையை கடனா கொடுப்பாரா.. பாசில் ஜோசப் நடிப்பில் வந்த பொன்மான்.. திரைப்பட கதை..!
நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாள சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் கூட நடிகர் பாசில் ஜோசப்பிற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வந்து ட்ரெண்ட் ஆன திரைப்படம்தான் பொன்மான். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாசில் ஜோசப் இப்போது வரிசையாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கேரளாவில் இருக்கும் வரதட்சணை பிரச்சனையை பேசும் வகையில் பொன்மான் திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி பாசில் ஜோசப் ஒரு வித்தியாசமான வேலையை செய்து வருகிறார்.
அதாவது திருமணம் செய்வதற்கு தேவையான நகை வாங்க காசு இல்லாமல் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த நகையை திருமணத்திற்கு முன்பே கொடுக்கிறார் பாசில் ஜோசப். ஆனால் அதற்கு பதிலாக மறுநாள் வரும் மொய் தொகை மூலமாக நகைக்கான தொகையை அந்த குடும்பம் கொடுத்துவிட வேண்டும்.
கொடுக்காத பட்சத்தில் பாசில் ஜோசப் அந்த நகையை திரும்ப பெற்று சென்றுவிடுவார். இந்த நிலையில் இதே மாதிரி ஒரு திருமணத்திற்கு நகையை கொடுக்க செல்கிறார் பாசில் ஜோசப்.
ஆனால் அந்த குடும்பமே சேர்ந்து பாசில் ஜோசப்பை ஏமாற்ற பார்க்கிறது. இந்த நிலையில் அவர் எப்படி நகையை வாங்க போகிறார் என்பதாக படத்தின் கதை செல்கிறது.
