Connect with us

என்னோட வெற்றிக்கு மிகப்பெரிய காரணமே அந்த புக்குதான்!.. ரகசியத்தை வெளியிட்ட இளையராஜா!..

ilayaraja

Cinema History

என்னோட வெற்றிக்கு மிகப்பெரிய காரணமே அந்த புக்குதான்!.. ரகசியத்தை வெளியிட்ட இளையராஜா!..

Social Media Bar

Ilayaraja :  இளையராஜா தமிழில் பல விதமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல பாடல்களை பாடியும் இருக்கிறார். இளையராஜா சிறப்பாக பாட கூடியவர். அவர் பாடிய பல பாடல்கள் மிக பிரபலமானவை.

குயில் பாட்டு பாடலில் துவங்கி விடுதலை படத்தில் பாடிய காட்டுமல்லி பாடல் வரை இளையராஜா பாடினாலே அந்த பாடல் ஹிட்டுதான் என கூறலாம். இப்படியெல்லாம் இளையராஜா காதல் வருணனைகளை கொண்டு பாடல் இசையமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் நாவல்தான் என்கிறார் இளையராஜா.

இளையராஜா இளம் வயதில் அவரது குடும்பத்தாருடன் சென்று பொன்னியின் செல்வன் நாவலை படிப்பார். அப்போதெல்லாம் டிவி மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத காரணத்தால் இருக்கும் ஒரே பொழுதுப்போக்கு புத்தக வாசிப்பு மட்டுமே.

எனவே பலமுறை பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்திருக்கிறார் இளையராஜா. அதில் உள்ள காதல் நகைச்சுவைதான் அவரது பாடல்களில் அவற்றை சேர்க்க உதவியாக இருந்தது என இளையராஜா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

To Top