News
பொன்னியின் செல்வன், நானே வருவேன் – இரண்டு படத்திலும் உள்ள பாசிட்டிவ் விஷயங்கள்
நாளை செப்டம் 29 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்திற்கு பல வித எதிர்ப்பார்ப்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தில் மொத்தம் 2 தனுஷ்கள் வருகின்றனர். அதில் ஒரு தனுஷ் குடும்ப தலைவராகவும், மற்றொருவர் சீரியல் கில்லராகவும் இருக்கிறார் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.
மேலும் இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். பொதுவாக செல்வராகவன் திரைப்படம் என்றாலே கதாநாயகர்கள் சற்று வித்தியாசமான கதாபாத்திரமாகதான் இருப்பார்கள். அப்படி இருக்கையில் அவர் சீரியல் கில்லராகவே ஒரு கதாபாத்திரத்தை அமைத்திருப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடிகர் தனுஷும் தமிழில் சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதால் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது
. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா இன்னும் பலர் நடித்து உள்ளனர். எம்.ஜி.ஆர் காலம் முதலே எடுக்க நினைத்து, இப்போது படமாக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதற்கு போட்டியாக வெளியாகும் நானே வருவேன் திரைப்படம் வெற்றி அடையுமா? என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.
தற்சமயம் வரை தமிழகம் முழுவதும் நானே வருவேன் திரைப்படத்தை காட்டிலும் பொன்னியின் செல்வன் திரைப்படமே அதிகமாக புக்கிங் ஆகியுள்ளது. எனவே இது கண்டிப்பாக நானே வருவேன் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தனுஷின் தனிப்பட்ட நடிப்பிற்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் தனியே ரசிகர்கள் இருப்பதாலும், படம் வித்தியாசமான கதை களத்தை கொண்டிருப்பதாலும் இது வெற்றி படமாக அமைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
