Connect with us

நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ்.. ட்ரெண்டாகும் பூஜா ஹெக்தே…

News

நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ்.. ட்ரெண்டாகும் பூஜா ஹெக்தே…

Social Media Bar

தமிழ் சினிமாவில் அறிமுகமாகியும் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சினிமாவில் சென்று வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூஜா ஹெக்தே. தமிழில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்பொழுது மிக சிறு வயதில்தான் இருந்தார் பூஜா ஹெக்தே. ஆனால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கில் சென்று முயற்சி செய்தார்.

தெலுங்கில் அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிப்பை விடவும் அங்கு கவர்ச்சிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பூஜா ஹெக்தே வரவேற்பு:

ஒரு நடிகை நல்ல கவர்ச்சியாக நடித்தார் என்றால் அவருக்கு எப்போதுமே தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வரும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி கிடையாது.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கவர்ச்சி மட்டுமே காட்டி ஒரு நடிகை இங்கு தொடர்ந்து வரவேற்பை பெற முடியாது இந்த நிலையில் பூஜா ஹெக்தே தெலுங்கில் அதிக வரவேற்பு பெற துவங்கினார்.

தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று  பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை கண்டதாக கூறப்படுகிறது  இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்தே நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியைதான் காணும் என்று பேச்சுக்கள் வர துவங்கின.

தொடர்ந்து தோல்வி படம்:

இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனாலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியே வெளியிட்டு வரும் பூஜா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

பொதுவாகவே யோகா செய்வதை அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிடும் பழக்கம் கொண்டவர் பூஜா ஹெக்தே அந்த வகையில் நீச்சல் உடையில் யோகா செய்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படம் அழகாக இருப்பதால் இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

To Top