Actress
வெள்ளை உடையில் வெஸ்டர்ன் ஸ்டைலில் மிளிரும் பூஜா ஹெக்தே
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைதான் பூஜா ஹெக்தே. தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலோ என்னவோ பூஜா ஹெக்தேவிற்கு தமிழிலும் கூட அதிகமான ரசிகர்கள் உண்டு. பல வகை முக பாவனைகளை காட்டி ரசிகர்களை மதி மயங்க செய்வதில் பூஜா ஹெக்தே கை தேர்ந்தவர் என கூறலாம்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பூஜா ஹெக்தே அதிகமாக யோகா செய்பவராவார். தெலுங்கு சினிமாவில் பிரபலமானாதும் இவர் பாலிவுட்டிற்கும் சென்றார். பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடித்தார்.
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் பாலிவுட் சினிமாவில் நடிப்பதை பெரும் பாக்கியமாக கருதினர். ஏனெனில் பாலிவுட்டின் மார்க்கெட் பெரியது. அதன் மொழி ஹிந்தி என்பதால் கிட்டத்தட்ட மொத்த வட இந்தியாவிலும் அந்த படங்கள் ஓடும்.

ஆனால் தற்சமயம் தென்னிந்திய திரைப்படங்களே இந்தியா முழுவதும் வெளியாகி ஆயிரம் கோடி கணக்கில் வசூல் செய்வதால் தென்னிந்திய சினிமாவிற்கும் கூட ஒரு மதிப்பு கிடைத்துள்ளது.
எனவே பூஜா ஹெக்தே மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கே வந்துவிட்டார்.

திரும்பவும் தமிழ் சினிமாவில் நுழைவதற்காக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் ரசிகர்களை கவர்வதற்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்சமயம் வெள்ளை உடை, வெள்ளை ஷூவில் அவர் வெளியிட்டுள்ள கிளர்ச்சியூட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
