எனக்கு பிடிச்ச மூன்று நடிகர்கள் படம்.. ஆர்யா, விஜய் சேதுபதி லிஸ்டில் இந்த நடிகருமா? ஓப்பன் டாக் கொடுத்த பூஜா ஹெக்தே..!
தமிழில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கூட நடிகை பூஜா ஹெக்தேவிற்கு தொடர்ந்து தமிழில் வரவேற்புகள் கிடைக்காமல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார். தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்தே இருந்து வருகிறார்.
இவர் வெகு வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துவங்கி இருக்கின்றன. தமிழில் தற்சமயம் ரெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்தே.

தொடர்ந்து இன்னும் நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்து அவர் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஆர்யா நடித்த சார்ப்பாட்டா பரம்பரை எனக்கு மிகவும் பிடித்த படம்.
அது மாதிரியான தரமான படங்கள் மிக குறைவுதான். அதே போல மகாராஜா திரைப்படம் மிகவும் பிடிக்கும். தெலுங்கு நடிகர் நானி நடித்த நின்னு கோரி என்கிற திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாகும். இதை எந்த பேட்டியிலும் நான் கூறியது கிடையாது என கூறியுள்ளார் பூஜா ஹெக்தே.