Tamil Cinema News
மங்காத்தா 2 வுக்கு ப்ளானா? நடிகர் அஜித்தின் அடுத்த திட்டம்..!
நடிகர் அஜித் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மிக பிரபலமானது. முக்கியமாக அவர் வில்லன் கதாபாத்திரமாக நடித்த மங்காத்தா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும்.
மங்காத்தா திரைப்படத்திற்கு முன்பு அட்டகாசம் திரைப்படத்தில் கொஞ்சம் வில்லனாக ஒரு கதாபாத்திரம் இருந்தது. மற்றபடி முழுமையாக ஒரு வில்லனாக நடித்த திரைப்படம் வாலி திரைப்படம் மட்டும் தான்.
அதற்குப் பிறகு மங்காத்தா திரைப்படத்தில்தான் வில்லனாக நடித்தார் அஜித் வாலி திரைப்படத்தின் பொழுது அஜித்துக்கு அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த மாதிரியான வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவில்லை.
Mankaatha 2 ajith act:
அதனை பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் பயங்கர வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு வெங்கட் பிரபு அஜித்துடன் இணைந்து படம் பண்ணவே இல்லை.
இப்படி இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இப்பொழுது அவர்களுக்குள் மீண்டும் நட்பு உண்டாகி இருக்கிறது. எனவே அடுத்து வெங்கட் பிரபுவிற்கு அஜித் வாய்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் மங்காத்தா 2 திரைப்படம் உருவாவதற்கும் வாய்ப்பு உண்டு என்று பேச்சுக்கள் இருக்கின்றன.