Cinema History
மிஸ் பண்ணிடாதீங்க!. அப்புறம் வருத்தப்படுவீங்க… மாஸ் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்..
சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் கூட ஒரு நடிகரை பெரிதாக பிரபலமாக செய்யும். உதாரணத்திற்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அந்த ஒரு படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதே போல நடிகர் பிரபாஸ் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு உதவும் வகையில் ஒரு கதை அவருக்கு வந்தது. அது தனி ஒருவன் திரைப்படத்தின் கதைதான். தனி ஒருவன் திரைப்பட கதையை இயக்குனர் மோகன் ராஜா எழுதும்போது அதை பிரபாஸ்க்காகதான் எழுதினார்.
ஆனால் அப்போது காதல் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த பிரபாஸ் இந்த மாதிரி கதை எனக்கு வேண்டாம். காதல் கதை இருந்தால் கூறுங்கள் என கூறிவிட்டார். அதனையடுத்து அந்த கதையை கொஞ்சம் மாற்றி அமைத்து ஜெயம் ரவியை வைத்து படமாக்கினார் மோகன் ராஜா.
அந்த கதையும் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கண்டது.
