பிரபாஸை கலாய்த்த நெட்ப்ளிக்ஸ்! – ஆத்திரத்தில் ரசிகர்கள்

நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு பான் இந்தியா கதாநாயகன் ஆவார். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் நல்ல ஹிட் கொடுத்த திரைப்படமாகும்.

Social Media Bar

இதற்கு பிறகு சாஹோ, ராதே ஷியாம் என வரிசையாக பேன் இந்தியா படமாக நடித்தார் பிரபாஸ். ஆனால் இந்த படங்கள் எதுவுமே பாகுபலி அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

அதிலும் ராதே ஷியாம் திரைப்படம் பயங்கரமான தோல்வியை கண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் மூலம் பிரபாஸ் நடித்து உருவான படம் ஆதிபுருஷ். இதுவும் கூட எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 100க்கும் அதிகமான நாடுகளில் தங்களது ஓ.டி.டி சேவையை வழங்கி வருகிறது. இந்தோனிசியாவில் உள்ள நெட்ப்ளிக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாஸை கலாய்த்து பதிவு ஒன்றை போட்டிருந்தனர்.

அதில் பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் குறித்து விமர்சிக்கப்பட்டது. இந்த பிரச்சனை பெரிதாகவும் நெட்ப்ளிக்ஸ் இந்தோனிசியா அந்த டிவிட்டை அழித்துவிட்டது. இதனால் கோபமான பிரபாஸின் ரசிகர்கள் தொடர்ந்து நெட்ப்ளிக்ஸை அன்இன்ஸ்டால் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.