இரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட வனிதா!.. பிரதீப் ரசிகர்கள் செய்த வேலை.. அடக்கொடுமையே!..
Actress Vanitha : வழக்கமாக நிகழ்வதை விடவும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி விஸ்வரூபம் எடுத்து சென்று கொண்டுள்ளது. பிரதீப்பை எலிமினேட் செய்தது முதலே ஒரே சலசலப்பாகதான் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தினசரி பிக்பாஸ் குறித்து தனது விமர்சனத்தை அளித்து வந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.
இப்படியாக நேற்று விமர்சனம் கொடுத்துவிட்டு வரும்போது ஒரு நபரால் தாக்கப்பட்டுள்ளார் வனிதா. இதுக்குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறும்போது, நான் பிக்பாஸ் விமர்சனத்தை முடித்துவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டு, கார் இருக்கும் பகுதிக்கு சென்றேன். அங்கு இருளில் ஒரு ஆள் வந்தான். அவன் என்னிடம் ரெட் கார்டு கொடுக்கிறீங்களா?

நீயும் சப்போர்ட் வேற என கூறிவிட்டு என்னை அடித்து கீழே தள்ளினான். இதனால் என முகத்தில் இரத்தம் வர துவங்கியது. அப்போது மணி நள்ளிரவு 1 என்பதால் அங்கு யாரும் இல்லை. இதனையடுத்து அதை நான் என் தங்கையிடம் கூறினேன்.
ஆனால் என்னை தாக்கியது யார் என எனக்கு இன்னமும் தெரியவில்லை. எனவே எனது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில நாட்கள் இதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். ப்ரதீப் ஆண்டனியின் ரசிகர்தான் என்னை தாக்கினார். பிக்பாஸ் வெறும் கேம் ஷோ என்பதை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் என வனிதா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இதுக்குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது சென்னை போலீஸ். மேலும் சமூக வலைத்தளங்களில் இது ட்ரெண்டாகி கொண்டுள்ளது.