Connect with us

பிரதீப்பே வந்தாலும் ஆண்டவர் விடமாட்டார்.. அரசியல் காரணம் இருக்கு!.. புழுதி தட்டும் நெட்டிசன்கள்..

kamal pradeep

Bigg Boss Tamil

பிரதீப்பே வந்தாலும் ஆண்டவர் விடமாட்டார்.. அரசியல் காரணம் இருக்கு!.. புழுதி தட்டும் நெட்டிசன்கள்..

Social Media Bar

பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்ட வாரத்தில் இருந்துதான் சூடு பிடித்து சென்றுக்கொண்டுள்ளது. ஏனெனில் பிரதீப் எலிமினேட் ஆன பிறகுதான் மாயா தனது ஆட்டத்தை துவங்கினார். மாயா கேப்டனாக இருந்த ஒருவாரம் மிகவும் பரபரப்பாக சென்றது.

ஆனால் பிரதீப்பை நீக்கியது குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் பிக்பாஸ் ரசிகர்களிடையே நீங்கவில்லை. ஏனெனில் பெண்கள் பாதுக்காப்பிற்கு பிரதீப் அச்சுறுத்தலாக இருப்பதாக பெரும்பான்மையான பெண்கள் கூறியதை அடுத்து பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டார்.

இதில் கமல்ஹாசனின் பங்கு முக்கியமாக இருந்தது. கமல்ஹாசன் தான் இதற்காக பெண்களை நிர்பந்தப்படுத்தினார் என கூறும் நெட்டிசன்கள் அதுக்குறித்த சில வீடியோக்களையும் வெளியிட்டிருந்தனர். அதே சமயம் பிரதீப் குறித்து பெண்கள் கூறிய குற்றச்சாட்டுகளுமே பொய் என்பதை போன்ற சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸை விட்டு வெளியே சென்ற 3 போட்டியாளர்களை மறுபடியும் உள்ளே கொண்டு வர ப்ளான் செய்துள்ளனர். இதில் பிரதீப் இருப்பாரா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் வந்துள்ளது. பிரதீப்பே பிக்பாஸ் வீட்டிற்குள் வர தயாராக இருந்தாலும் கமல்ஹாசன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஏனெனில் கமல் அப்படி ஒப்புக்கொண்டால் அது பிரதீப் நிரபராதி என்பதாக காட்டிவிடும். அப்படியென்றால் கமலின் முடிவு தவறானது என்பதாக அர்த்தமாகும். எனவே கமல் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என ஒரு சாரார் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் கமல்ஹாசன் பெண் பாதுகாப்பு என இந்த விஷயத்தை வெளிக்காட்டியதே அவரின் அரசியல் ஆதாயத்துக்காகதான்.

ஏனெனில் சினிமாவில் பெண்கள் குறித்து அதிக சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகர் கமல்ஹாசன். புன்னகை மன்னன் படத்தில் கூட அனுமதி இல்லாமல் நடிகைக்கு உதட்டில் இவர் முத்தமிட்டதாக குற்றச்சாட்டு உண்டு. எனவே தன்னை பெண்களின் பாதுகாவலராக காட்டி கொள்ளவே கமல் இப்படி செய்கிறார் என ஒரு சாரார் கூறுகின்றனர்.

எனவே பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது கேள்விக்குறிதான் என்று கூறப்படுகிறது.

To Top