Connect with us

ரிவேஞ்ச் மோட்ல திரும்ப வரேன்… அறிவிப்பு கொடுத்த பிரதீப்!..

pradeep antony

Cinema History

ரிவேஞ்ச் மோட்ல திரும்ப வரேன்… அறிவிப்பு கொடுத்த பிரதீப்!..

Social Media Bar

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஒரே போட்டியாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் பிரதீப்பை எலிமினேஷன் செய்தது முதலே பிக்பாஸ் குறித்த பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

ஏனெனில் வேண்டும் என்றே பிரதீப் மீது அவதூறு கூறி அவரை போட்டியில் இருந்து அனுப்பியதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தாற் போல பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த போட்டியாளர்களும் தற்சமயம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்திருக்க கூடாது என யோசித்து வருகின்றனர்.

pradeep
Pradeep

எனவே பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு தகுந்தாற் போல ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரதீப். அதில் அவர் கூறும்போது திரும்ப அழைத்துக்கொண்டால் நன்றாக விளையாடுவதாக கூறியுள்ளார்.

இண்டர்வெல் முடிந்து ஹீரோ ரிவேஞ்ச் மோடில் வருவது போல என் ஆட்டம் இருக்கும் என்று கூறியுள்ளார். இவ்வளவு நம்பிக்கையுடன் பிரதீப் கூறுவதை பார்க்கும்போது கண்டிப்பாக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top