Connect with us

முக்கிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு வந்த பிரதீப்.. வாரி குவிக்கும் டிராகன். இதுவரை வந்த வசூல்.!

Box Office

முக்கிய ஹீரோக்கள் லிஸ்ட்டுக்கு வந்த பிரதீப்.. வாரி குவிக்கும் டிராகன். இதுவரை வந்த வசூல்.!

Social Media Bar

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகராக ட்ரெண்டாகி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதன் முதலாக கோமாளி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் இவர் வந்திருப்பதை பார்க்க முடியும்.

அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் இவரே கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ட்ரெண்ட் ஆனது. ஆனாலும் அதில் பெண்கள் குறித்த அவரது காட்சிகளுக்கு விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் அந்த களங்கத்தை துடைக்கும் வகையில்தான் தற்சமயம் டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்தின் கதை ஆரம்பத்தில் வழக்கமான காலேஜ் வாழ்க்கையை கொண்ட கதையாக இருந்தாலும் ஒழுங்காக படிக்காத காரணத்தால் ஏற்படும் பின் விளைவுகளை படம் காட்டுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் டிராகன் வெளியான 10 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்சமயம் 11 நாட்களை கடந்த நிலையில் 112 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு மாத காலம் இப்படியே ஓடும் பட்சத்தில் படம் 250 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top