Cinema History
அடப்பாவிகளா!.. இது ஏற்கனவே நான் நடிச்ச படத்தோட கதைடா.. அரண்டு போன பிரகாஷ்ராஜ்!.
பிரகாஷ்ராஜ் தமிழில் தனித்துவமான வில்லன்களில் முக்கியமானவராவார். வெகு காலங்களாகவே தமிழில் இவர் வில்லனாக நடித்து வந்தாலும் கூட எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் பிரகாஷ்ராஜை பார்ப்பதற்கு ஆடியன்ஸ் உண்டு என்றே கூறலாம்.
ஏனெனில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே மொழி மாதிரியான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் பிரகாஷ் ராஜ். இந்த நிலையில்தான் இயக்குனர் தரணி கில்லி திரைப்படத்தை இயக்குவதற்கான வேலையில் இறங்கினார்.
அப்போது படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்பதுதான் அவருக்கு பெரிய தொல்லையாக இருந்துள்ளது. யாரை நடிக்க வைத்தாலும் அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர்கள் சரியாக இருப்பார்கள் என தோன்றவில்லை.
இப்படியே எட்டு நடிகர்களை நிராகரித்தார் தரணி. இறுதியில் கில்லியின் ஒரிஜினல் படமான ஒக்கடுவில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜையே வில்லனாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். படத்தின் கதையையும் பிரகாஷ் ராஜிடம் கூறியுள்ளனர்.
அதை கேட்ட பிரகாஷ் ராஜ் ஏதோ புதிதாக கதையை சொல்வது போல அதை கேட்டுவிட்டு கதை சிறப்பாக் இருப்பதாக கூறியுள்ளார். இது நீங்கள் நடித்த ஒக்கடு படத்தின் கதைதான் என்று கூறவும் பிரகாஷ்ராஜ் ஆச்சரியமாக அந்த கதையா இந்த படம் என கேட்டுள்ளார்.
அந்த அளவிற்கு இரு படங்களிலும் தரணி மாற்றங்களை செய்திருந்தார். இதை தரணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்