News
அந்த பேய் படத்த தனியா பார்த்தா 5 லட்சம்.. படக்குழு அறிவிப்புக்கு இதுதான் காரணம்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்கு கடும் போட்டியாக ஒருவர் இருந்தார் என்றால் அது நடிகர் பிரசாந்த். பல வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து வந்த நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் நடித்த பேய் படம் ஒன்றைப்பற்றி அவர் பேட்டியில் கூறி இருக்கும் தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் தன்னுடைய அப்பா தியாகராஜன் பிரபல இயக்குனர் என்றாலும் அதன் பின்னணியை வைத்துக்கொண்டு அவர் சினிமாவில் நுழையாமல், தன்னுடைய நடிப்பு திறமையால் மட்டும் சினிமாவில் அடுத்தடுத்த பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
மேலும் பிரசாந்தின் வளர்ச்சிக்கு அவருடைய அப்பாவின் பங்கு அதிகமாக இருந்தாலும், பிரசாந்தின் நடிப்பு திறமையும் ஒரு காரணமாக இருந்தது. அவர் தன்னுடைய முதல் படமான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு நல்ல புகழை வாங்கிக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

பிரசாந்தின் வாழ்க்கை பயணத்தில் அவருடைய அப்பா முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிரசாந்தின் வளர்ச்சிக்கு அவரின் அப்பா எவ்வளவு முக்கியமாக இருக்கிறார் என அனைவரும் கூறப்பட்டு வந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் பிரசாந்த் சினிமாவை விட்டு விலகியதற்கும் அவருடைய அப்பா தான் காரணம் என அனைவரும் சர்ச்சையாக பேசி வந்தார்கள்.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் சினிமாவில் ரி-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஷாக் திரைப்படம் குறித்து நடிகர் பிரசாந்த் கூறிய தகவல்
பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரசாந்த் தான் நடித்த ஷாக் திரைப்படத்தை பற்றி கூறியிருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திகில் திரைப்படம் தான் ஷாக். இந்த திரைப்படத்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்திருந்தார்.
பிரசாந்த் மற்றும் மீனா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அப்பாஸ் தியாகராஜன், சுகாசினி, கலைராணி மற்றும் சரத் பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் பிரசாந்த் இந்த படத்தை பற்றி கூறும் பொழுது, நான் அப்பாவிடம் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று கூறினேன். அப்போது என் நினைவிற்கு வந்தது பேய் படம் ஏனென்றால் அந்த காலகட்டத்தில் பேய் படங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை.
இதனால் பல கதைகள் கேட்டேன் ஆயிரக்கணக்கான கதைகளை கேட்டு இறுதியாக ஷாக் திரைப்படத்தை நாங்கள் எடுத்திருந்தோம். படம் முடிந்து நாங்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சேலஞ்ச் ஒன்று கொடுத்திருந்தோம். இந்த படத்தை தனியாக பார்ப்பவர்களுக்கு ஐந்து லட்சம் கொடுப்பதாக கூறியிருந்தோம்.
ஏனென்றால் அந்த திரைப்படம் அவ்வளவு திரில்லராக இருக்கும் என கூறினார். ஆனால் தற்போது பல பேய் படங்களும் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வந்து கொண்டிருக்கும் நிலையில் ஷாக் திரைப்படத்தின் பாகங்கள் எடுத்து இருந்தால் இந்நேரம் 14 பாகங்கள் வந்திருக்கும் என பிரசாந்த் கூறியிருந்தார்.
