Connect with us

Vijayakanth: இது ஒன்னும் சினிமா கிடையாது!.. விஜயகாந்த் குறித்து பேசியதற்காக இயக்குனருக்கு எச்சரிக்கை கொடுத்த பிரேமலதா!..

premalatha pandiraj

News

Vijayakanth: இது ஒன்னும் சினிமா கிடையாது!.. விஜயகாந்த் குறித்து பேசியதற்காக இயக்குனருக்கு எச்சரிக்கை கொடுத்த பிரேமலதா!..

Social Media Bar

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு எல்லாம் முன்பு ரஜினியும் கமலும் போட்டி நடிகர்களாக இருந்தப்போது அவர்களுடன் போட்டி போட்டவர் நடிகர் விஜயகாந்த். கமல்ஹாசன் ரஜினிக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருந்ததோ அதே அளவிலான செல்வாக்கு விஜயகாந்திற்கும் இருந்தது.

நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சமயத்தில் விஜயகாந்த் சங்க உறுப்பினர்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். அதற்கு பிறகு அரசியலுக்கு வர நினைத்தவர் தொடர்ந்து அரசியலில் போராடி எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்த்தை பெற்றார்.

கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் அதிக உடல்நிலை குறைவால் கஷ்டப்பட்டு வருகிறார். அவரது முகத்தை கூட யாரும் பொது இடங்களில் காட்டுவது இல்லை. இந்த நிலையில் தற்சமயம் அவருக்கு மூச்சு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் விஜயகாந்த்.

vijayakanth
vijayakanth

பிறகு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தலைமை பதவியை பிரேமலதா பெற்றுக்கொண்டார், பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தை பார்த்த பலரும் கண்ணீர் வடித்து வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இதுக்குறித்து தனது எக்ஸ் தளத்தில் போடும்போது விஜயகாந்த் அவர்களுக்கு இப்போது ஓய்வு தேவை, அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பிரேமலதா கூறும்போது “எதை பத்தி வேணும்னாலும், என்ன வேணா பேசலாம்னு கிடையாது. கட்சி காரங்க எல்லோரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர், தட்டிவிட்டா பத்திக்கும், மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டு கொள்கிறேன். இது சினிமா கிடையாது, கட்சி எங்களுக்கு தெரியும் அவரை எப்படி பாத்துக்கணும்னு உங்க அறிவுரைக்கும் இலவச அட்வைஸ்க்கும் நன்றி என கூறியுள்ளார் பிரேமலதா.

To Top