News
இளையராஜாவை ஒதுக்கும் கங்கை அமரன்!.. பத்திரிக்கையில் வந்த பிரச்சனை!.
தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்று வந்தார் இளையராஜா.
இந்த நிலையில் இளையராஜாவின் வம்சாவளிகளுக்கும் எளிமையாக திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் அவரது மகனான யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இளையராஜா குடும்பம்:
அவருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து அவரும் இயக்குனராக அறிமுகமானார்.

கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமான காலம் முதலே அவருடைய படங்களில் அவரின் தம்பி பிரேம் ஜி நடித்து வருகிறார். இதன் மூலம் பிரேம் ஜியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகரானார். வெகு காலங்களாகவே பிரேம் ஜி திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்தார்.
பிரேம்ஜியின் திருமணம்:
அவரது திருமணத்தை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில் பிரேம் ஜியின் திருமண பத்திரிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில் பார்க்கும்போது அந்த பத்திரிக்கையில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்கள் இல்லை. இதனையடுத்து கங்கை அமரன் இளையராஜாவை அவாய்ட் செய்கிறாரா என பேச்சுக்கள் எழுந்துள்ளன.
