நடிகர் பிரித்திவிராஜ் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.
அதே சமயம் மலையாளத்தில் அதைவிட பிரபலமானவராக இருந்து வருகிறார். நடிகராகவும் இயக்குனராகவும் மலையாளத்தில் நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.
அப்படியாக சமீபத்தில் அவர் இயக்கி இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் எம்புரான். இந்த திரைப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாகமான லூசிபர் என்கிற திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியானது.
அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஸ்டீபன் என்கிற ஒரு கதாபாத்திரத்தினால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்த திரைப்படம் செல்லும்.
அதன் வழியாகவே இயேசு கிறிஸ்து மற்றும் சாத்தான் இருவரையும் குறிக்கும் வகையிலான பைபிள் விஷயங்களும் ஓரமாக சென்று கொண்டிருக்கும். அதே வகையில்தான் எம்புரான் திரைப்படமும் உருவாகி இருக்கிறது.
கேரள சினிமாவில் பொதுவாக பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் உருவாவது கிடையாது. ஏனெனில் வசூல் ரீதியாக மலையாள திரைப்படங்கள் பெரிய வசூலை கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் பிரித்திவிராஜ் துணிந்து தற்சமயம் பெரிய பட்ஜெட்டில் எம்புரான் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட கே.ஜி.எஃப் மாதிரியான கதைகளத்தை கொண்ட திரைப்படமாக இது இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரித்திவிராஜ் கூறும்பொழுது கேரளா சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக தான் எம்பிரான் இருக்கிறது.
கேரள சினிமாவின் வளர்ச்சியே இதை பொறுத்துதான் இருக்கிறது. துணிந்து இந்த விஷயத்தை செய்திருக்கிறோம் மக்கள் தங்களது ஆதரவை தர வேண்டும் தமிழில் படம் பார்க்க பிடிப்பவர்கள் இந்த படத்தை தமிழ் டப்பிங் பார்ப்பது நல்லது.
ஏனெனில் தமிழ் டப்பிங் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் பிரித்திவிராஜ்.