மாறுபட்ட நடிப்பில் ப்ரியாமணி களம் இறங்கும் குட் வைஃப்.. இதுதான் கதை..! 

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதற்கு பிறகு அவருக்கு மலைக்கோட்டை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பெரும் வரவேற்பு பெரும் ஒரு நடிகையாக பிரியாமணி மாறவே இல்லை. தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். அதற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்பு என்பதை இல்லாமல் இருந்து வந்தது.

priyamani

Social Media Bar

சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படத்தில் பிரியாமணிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடித்து வரும் பிரியாமணி தற்சமயம் குட் வைஃப் என்கிற ஒரு வெப்சீரிஸில் நடித்திருக்கிறார்.

குற்றத்திற்காக பழியை சுமந்து கைதாகும் தனது கணவனை காப்பாற்றும் ஒரு மனைவி கதாபாத்திரத்தில் பிரியாமணி இதில் வருகிறார் வெகு வருடங்களுக்குப் பிறகு பிரியாமணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.