Tamil Cinema News
நயன்தாரா அணுகிய விதமே தப்பு.. அதான் தனுஷ் ஒத்துக்கலை.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!
நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருகிறார் சம்பள விஷயத்திலும் நயன்தாராதான் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்த காலகட்டங்களில் தனுஷும் நயன்தாராவும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
அதற்கு பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு அவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டார் நயன்தாரா.
நயன்தாரா அணுகிய விதமே தப்பு:
ஆனால் தனுஷ் வழங்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதில் கூறும் பொழுது தனுஷ் அப்படி அனுமதியை வழங்காமல் இருக்கக்கூடிய ஆள் கிடையாது.
பிரச்சனை என்னவென்றால் நயன்தாரா தனுஷை நேரில் சந்தித்து இது பற்றி கேட்கவே இல்லை. சுற்றியுள்ள ஆட்களை பயன்படுத்தி கேட்டிருக்கிறார் அதனால் தான் தனுஷ் அனுமதி வழங்கவில்லை. ஒரு வேளை நயந்தாரா நேரில் சந்தித்து கேட்டிருந்தால் அவர் கொடுத்திருப்பார்.
ஏனெனில் நான் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது அதற்கு அவருக்கு 15 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். பிறகு சில வருடங்களாக அந்த படத்தை எடுக்க முடியவில்லை அதன் பிறகு நான் தனுஷிடம் இப்போது பாடம் எடுக்க முடியாது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அந்த அட்வான்ஸ் தொகையை பிறகு அவர் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் எனவே தனுஷ் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் தனஞ்செயன்.