News
கிரிஸ்டோபர் நோலன் வாங்குன விருதை வாங்கிய தமிழ் இயக்குனர்!. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்!.
தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களை தயாரிப்பதையும் வேலையாக கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
பெரும்பாலும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் திரைப்படங்கள் எல்லாம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களாக தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் அவரது தயாரிப்பில் உருவான திரைப்படம் கொட்டு காளி கொட்டு காளி திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் பெற்ற விருது:
இந்த நிலையில் படம் குறித்து பேட்டியில் பேசியிருந்த சிவகார்த்திகேயன். ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார். ஒரு திரைப்பட விழாவிற்கு சென்றபோதுதான் பி.எஸ் வினோத்ராஜை எஸ்.கே பார்த்துள்ளார். அப்போது கூழாங்கல் திரைப்படத்திற்காக அவருக்கு விருது கொடுக்கப்பட்டது.

அப்போது அந்த விருது குறித்து சிவகார்த்திகேயன் விசாரித்தப்போது அது ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனுக்கு கொடுக்கப்பட்ட விருது என கூறியிருக்கின்றனர். அப்படிப்பட்ட விருதை வாங்கும் ஒரு தமிழ் இயக்குனரை தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியவில்லையே என ஆச்சரியப்பட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
உடனே அவரை அழைத்து அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்துள்ளார் எஸ்.கே. அதுதான் கொட்டுக்காளி திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்து எஸ்.கே தயாரிப்பில் இவர் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
